முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச ஆகியோர் இன்றைய சபை அமர்விலும் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் குறித்த சபை அமர்வில் , சமல் ராஜபக்ச, சஷீந்திர ராஜபக்ச ஆகியோர் பங்கேற்றிருந்ததாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் மே – 09 ஆம் திகதி இடம்பெற்ற கலவர சம்பவத்தின் பின்னர், 10 ஆம் திகதி அலரிமாளிகையில் இருந்து மஹிந்த ராஜபக்ச வெளியேறி திருகோணமலை கடற்படை தளத்தில் தங்கவைக்கப்பட்டார்.
அதன்பின்னர் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற மொட்டு கட்சி கூட்டத்திலும் மஹிந்த, நாமல் ஆகியோர் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.



