விசேட தேவையுடையவர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு கோரிக்கை.

0

அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் விசேட தேவையுடையவர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எரிபொருள், உணவு, சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் விசேட தேவையுடையவர்களுக்கே முன்னுரிமை வழங்குமாறு அனைத்து பொது மற்றும் தனியார் நிறுவனங்களிடம் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன் நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக விசேட தேவையுடையவர்கள் அத்தியாவசிய சேவைகளுக்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தகவல் வெளியாகியது.

இதனையடுத்து அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply