வறுமையில் இருக்கும் வீட்டில் கூட வருமானம் கொட்டோ கொட்டென்று கொட்ட தொடங்கும்.

0

இப்படி ரொம்பவும் பணம் காசு இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் ஒரு பக்கம் இருக்க, இன்னும் சில பேர் தட்டித் தடுமாறி ஓரளவிற்கு நடுத்தர வாழ்க்கையை வாழும் அளவிற்கு வசதியாக இருப்பார்கள்.

ஆனால் அவர்களால் வாழ்க்கையில் அடுத்த நிலைக்கு செல்ல முடியாது. அதாவது பணம் சம்பாதித்து சொத்து சுகம் சேர்ப்பது, நகைகள் வாங்குவது போன்ற விஷயங்களை செய்ய முடியாமல் தவித்து வருவார்கள்.

இப்படி நீங்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் சரி, உங்கள் குலதெய்வக் கோவிலுக்கு இந்த பொருளை வாங்கி கொடுத்து அபிஷேகம் செய்யுங்கள்.

நிச்சயமாக நீங்கள் இருக்கக்கூடிய நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு சீக்கிரமே முன்னேறி விடுவீர்கள்.

உங்களுடைய குல தெய்வம் எந்த தெய்வமாக இருந்தாலும் அந்த தெய்வத்திற்கு வாரம் 1 முறை தாமரை பூவை வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.

ரொம்பவும் வறுமையில் இருப்பவர்கள் ஒரே 1 தாமரைப்பூவை மட்டுமாவது உங்களுடைய குல தெய்வத்திற்கு வாங்கிக் கொடுத்து அந்தத் தாமரை இதழ்களால் குல தெய்வத்திற்கு அர்ச்சனை செய்யுங்கள்.

கொஞ்சம் வசதி வாய்ப்பு உடையவர்கள், இருக்கும் நிலையில் இருந்து மேலே செல்ல வேண்டுமென்றால் 21, 51 என்ற கணக்கில் கூட குலதெய்வ கோவிலுக்கு தாமரைப் பூவை வாங்கி கொடுப்பது மிக மிக விசேஷமான பலன்களை கொடுக்கும்.

அடுத்தபடியாக சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய குங்கும அர்ச்சனை குலதெய்வத்திற்கு செய்துவர வேண்டும்.

உங்கள் குல தெய்வம் ஆண் தெய்வமாக இருந்தாலும் சரி, பெண் தெய்வமாக இருந்தாலும் சரி குலதெய்வ கோவிலுக்கு சிவப்பு நிற குங்குமத்தை வாங்கி கொடுத்து குங்கும அர்ச்சனை செய்யலாம்.

அப்படி இல்லை என்றால் நீங்கள் வாங்கிக்கொடுத்த குங்குமத்தை வைத்து குங்கும அபிஷேகம் செய்யலாம் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டு மேலே சொன்ன இரண்டு விஷயங்களை பின்பற்றி வாருங்கள். வாரத்தில் ஒரு நாள் தாமரைப்பூ வாங்கிக் கொடுத்தால், அடுத்த வாரம் ஒருநாள் குங்குமம் வாங்கி கொடுக்கலாம்.

இப்படி மாற்றி மாற்றி இரண்டு பொருட்களையும் தொடர்ந்து குலதெய்வ கோவிலுக்கு வாங்கி கொடுக்கும் போது நம் குடும்பத்திற்கு தொடர்ந்து பல நன்மைகள் நடந்துகொண்டே இருக்கும்.

நம்பிக்கையோடு செய்து பாருங்கள். இந்த பரிகாரம் செய்வதற்கு கணக்கெல்லாம் கிடையாது.

உங்களால் எத்தனை வாரங்கள் இப்படி செய்ய முடியுமோ அத்தனை வாரங்கள் செய்து வரலாம்.

எங்களுடைய குலதெய்வம் ரொம்பவும் தொலைவில் உள்ளது. வாரம் ஒருமுறை அவ்வளவு தூரம் செல்வது கடினம் என்பவர்கள் என்ன செய்வது.

உங்களுடைய குலதெய்வம் பழனி முருகர் என்று வைத்துக் கொள்ளுங்கள்‌.

உங்கள் வீட்டின் அருகில் ஏதாவது முருகர் கோவில் இருக்கும் அல்லவா அந்த முருகர் கோவிலுக்கு நீங்கள் சென்று அந்த பழனி முருகனை வேண்டிக் கொண்டு, இந்த பொருட்களை வாங்கிக் கொடுத்து அபிஷேகமோ அல்லது அர்ச்சனையோ செய்து கொள்ளலாம். தவறு கிடையாது.

குலதெய்வமே தெரியாது என்பவர்கள் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதாவது அம்மன் கோவில்களுக்கு தாமரை பூவையும் குங்குமத்தையும் வாங்கி கொடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.

நிச்சயமாக உங்கள் வீட்டில் இருக்கும் கஷ்டத்திற்கு கூடிய சீக்கிரம் ஒரு விடிவு காலம் பிறக்கும்.

Leave a Reply