சந்தையில் மரக்கறிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் நிலைமை மோசமாகும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் தற்போதைய மரக்கறி விலைகள் சுமார் 35 முதல் 40 சதவீதம் வரை உயரும் என்றும் அதன் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
மேலும் நாட்டில் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் காய்கறி வரத்து குறைவடைந்தமையும் விலையேற்றத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.



