இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

0

நாட்டின் பல பாகங்களிலும் வீடியோ உடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டின் தென்மேல், மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

அவ்வாறு சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் , மேல் மாகாணத்தின் பல இடங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

வட மாகாணத்திலும் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.

ஆகவே பொதுமக்கள் அனைவரும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply