எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் தடை.

0

2021 கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் க.பொ.த சாதாரண தர பரீட்சையுடன் தொடர்புடைய கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17-05-2022) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது

அத்துடன் குறித்த பரீட்சை எதிர்வரும் 23 ஆம் திகதி முதல், ஜூன் மாதம் முதலாம் திகதிவரை இடம்பெறவுள்ளது.

இந்த தடை உத்தரவை மீறினால் பரீட்சை சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply