துளசி மாடம் வைக்க வேண்டிய இடம்..!!

0

சூரிய ஒளி விழுகின்ற இடமாகவும், அந்த இடத்தில் கிழக்கு திசை நோக்கியும் துளசி மாடம் அமைக்க வேண்டும் என்பது சாஸ்திர கூற்று. அதன்படி நமது வீட்டின் தரையை விட தாழ்வான பகுதியில் இந்த துளசி மாடத்தை வைத்துவிடாமல் சற்று உயரமாக வைக்க வேண்டும்.

துளசி மாடத்தை வழிபடும் முறை: துளசியை வீட்டில் வைத்து வளர்த்து வந்தால் மட்டும் போதாது.

அதற்கு தினமும் விளக்கேற்றி, பூஜை செய்து, மூன்று முறை வலம் வரவேண்டும்.

அதுமட்டுமல்லாமல் துளசி செடியை வலம் வரும் பொழுது அதற்கான மந்திரத்தை உச்சரிப்பது சிறந்த பலனைக் கொடுக்கிறது.

துளசிச் செடியை வலம் வரும் பொழுது சொல்ல வேண்டிய மந்திரம்:

“பிரசீத துளசி தேவி பிரசீத ஹரி வல்லயே க்ஷீ ரோதமத நோத் புதே துளசி த்வாம் நமாம்யஹம்” இந்த மந்திரத்தைச் சொல்லி தினமும் மூன்று முறை துளசிச் செடியை வலம்வர உங்கள் பாவங்கள் அனைத்தும் மறைந்து புண்ணியம் வந்து சேரும்.

Leave a Reply