பொதுமக்கள் விருப்பத்துக்கு மதிப்பளிக்குமாறு கோரிகை.

0

இலங்கை மருத்துவ சங்கம், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள் விருப்பத்துக்கு மதிப்பளிக்குமாறு கோரியே குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டை அமைதியான முறையில் ஆட்சி செய்யும் திறனை அரசாங்கம் இழந்துவிட்டதாக அந்த சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது

இந்தநிலையில், தீவிரமான சீர்திருத்த நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், எதிர்வரும் நாட்களில் மேலும் வன்முறைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்த சங்கம் எச்சரித்துள்ளது.

இது போன்ற வன்முறைகள் தொடர்ந்தால், அது, சுகாதாரத் துறையை மேலும் சீரழிக்கும் என்றும் இலங்கை மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது.

நேற்று இரண்டு போராட்டத் தளங்களிலும் காயமடைந்த 220 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும்,23 பேர் கொழும்பு தெற்கு களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆகவே குறித்த தாக்குதல் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்பதை கண்டறியமுடியும் என்றும் இலங்கை மருத்துவ சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply