சென்னை மாநகர் முழுவதும் செல்போன் சேவையில் திடீர் பாதிப்பு.

0

சென்னையில் இன்று அதிகாலை வேளையில் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதனை தொடர்ந்து குறித்த பகுதியில் மின் தடையும் ஏற்பட்டது.

இந்த நிலையில் காலை 9.30 மணி அளவில் செல்போன் சேவை திடீரென முடங்கியது.

நெட்வொர்க் சிக்னல் கிடைக்காததால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதனால் ஒருவருக்கொருவர் போனில் பேச முடியாமலும் தகவல்களை உடனுக்குடன் பரிமாறிக் கொள்ள முடியாமலும் மக்கள் கடும் அவதிக்குள்னார்கள்.

அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் வெளியிடங்களில் இருந்த தங்களது ஊழியர்களோடு தொடர்பு கொண்டு பேச முடியாமல் தவித்தனர்.

சுமார் 30 நிமிடங்கள் வரையில் செல்போன் சேவையில் பாதிப்பு நீடித்தது. பின்னர் படிப்படியாக செல்போன் சேவை சீரானது.

மேலும் மின் தடை மற்றும் செல்போன் தொடர்புகள் துண்டிப்பு போன்றவற்றால் சென்னை மாநகர் முழுவதும் மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply