நாட்டை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை சடுதியாக உயர்வு.

0

இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் வேலை வாய்ப்புக்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இவ்வாறு நாட்டை விட்டு சென்றவர்களில் அதிகமானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்காக சென்றுள்ளனர்.

அத்துடன் எதிர்வரும் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் வளர்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் எம்.எப். எம். அர்ஷாத் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் 2021 அந்த அறிக்கையின் பிரகாரம், கடந்த ஆண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 121,795 என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 127 சதவீதம் அதிகமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆண்டு வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை 300,000 ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply