வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு விநியோகம் இனி இல்லை.

0

நாட்டில் தற்போது எரிவாயுக்கு தட்டுப்பாடு இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு விநியோகம் இனி இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அத்துடன் தொழிற்சாலை நோக்கங்களுக்காக மட்டுமே எரிவாயு விநியோகிக்கப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனவே பொதுமக்கள் சமையல் எரிவாயுவுக்காக வரிசையில் நிற்க வேண்டாம் எனவும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக ஏழு மில்லியன் டொலர்களை ஏற்கனவே வழங்கியுள்ளோம்.

மேலும் அதுவரை பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply