மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை இதை செய்தால் கூட போதும்…!!

0

ஆனால் சந்தோஷத்திற்கு பிறகு வரக்கூடிய கஷ்டத்திற்கு காரணம், பிறருடைய கண் பார்வையும், கண் திருஷ்டியும் தான்.

அந்த கண் திருஷ்டியை போக்கி விட்டால் போதும் சந்தோஷத்திற்கு பின்னால் பெரிய கஷ்டம் எதுவும் வராமல் இருக்கும்.

அதற்கு ஒரு தாந்திரீக ரீதியான முறையைத் தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்த பரிகாரத்தை செய்ய நமக்கு தேவை 1 மாஇலை.

வேப்ப எண்ணெய். கசப்பான சம்பவங்களை இழுத்து போசுக்கூடிய தன்மை இந்த வேப்பெண்ணெய்க்கு உண்டு.

ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே ஒரு மா இலையின் மேலே வேப்பெண்ணெயை முழுமையாக தடவிவிட்டு இந்த இலையை ஒரு தட்டின் மேல் வைத்து வீட்டின் ஏதாவது ஒரு மூலையில் வைத்துவிடுங்கள்.

இது ஞாயிற்றுக்கிழமை முழுவதும் உங்களுடைய வீட்டில் அப்படியே இருக்கட்டும்.

ஞாயிற்றுக்கிழமை இரவு தூங்க செல்வதற்கு முன்பாக ஒன்பது மணிக்கு மேல் இந்த மாஇயைக் கொண்டு போய் அப்படியே நிலை வாசலுக்கு வெளியே வைத்து ஒரு கற்பூரத்தை வைத்து எரித்து விடுங்கள்.

உங்கள் வீட்டை பிடித்திருக்கும் கண்திருஷ்டி கெட்ட சக்தி எதிர்மறை ஆற்றல் அனைத்தும் இந்த மாஇலையோடு பொசுங்கிப் போய்விடும் என்பதுதான் நம்பிக்கை.

மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை இப்படி செய்தாலே போதும்.

குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் குறையும். சந்தோஷம் அதிகரிக்கும். மன நிம்மதி கிடைக்கும்.

பணப் பிரச்சனை நீங்கும். கடன் சுமை குறையும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

குழந்தைகள் உங்கள் சொல்படி கேட்டு நடப்பார்கள்.

அக்கம்பக்கம் வீட்டில் இருப்பவர்களுடைய எதிர்மறையான எண்ணங்கள் உங்கள் குடும்பத்தை தாக்காது.

உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இந்த பரிகாரத்தை மூன்று மாதங்கள் செய்து பாருங்கள்.

இதே போல உங்களுடைய நிலை வாசலில் வெள்ளிக்கிழமை பூஜை செய்வதற்கு முன்பாக மாஇலைத் தோரணம் கட்டி வரும் பழக்கத்தை கொண்டு வாருங்கள்.

இது உங்களுடைய வீட்டிற்கு முழுமையான நிரந்தரமான லட்சுமி கடாட்சத்தை தேடிக் கொடுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

Leave a Reply