யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தை திறப்பதற்கு இந்திய மத்திய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் ஜூன் மாதம் 6ஆம் திகதிக்கு முன்னர் குறித்த சர்வதேச விமான நிலையத்தை திறப்பதற்கு தீர்மானம் எட்டப்படுள்ளது.
இதனை இலங்கை வந்துள்ள பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக மாநில தலைவர் கு.அண்ணாமலை, தெரிவித்தார்.
மேலும் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை வெளியிட்டார்.



