அரிசிக்கான உச்சபட்ச சில்லரை விலை விற்பனையாகும் விலையைவிட அதிகம்.

0

அரிசிக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள உச்சபட்ச சில்லரை விலை, தற்போது சந்தையில் அரிசி விற்பனையாகும் விலையை விடஅதிகமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் அமுலுக்கு வரும் வகையில் அரிசிக்காக உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

இதன் பிரகாரம் வெள்ளை மற்றும் சிவப்பு சம்பா அரிசி ஒரு கிலோ கிராம் 220 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வெள்ளை மற்றும் சிவப்பு நாட்டு அரிசி ஒரு கிலோகிராம் 230 ரூபாய்கும் விற்பனை செய்யப்பட வேண்டும்.

அவ்வாறு கீரி சம்பா ஒரு கிலோ கிராம் 250 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக நிவாரண விலை அடிப்படையில் சந்தைக்கு விநியோகிக்கப்படும் அரசிக்கு இந்த விலை கட்டுப்பாடு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply