அரசாங்கம் விரைவில் மின்சாரக் கட்டணத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இலங்கை மின்சார ஒழுங்குமுறை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவே இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் மின்சார விநியோகத்தின் நட்டத்தை ஈடுசெய்யும் முகமாக, இலங்கை மின்சார சபை, கட்டண உயர்வுக்கான கோரிக்கையை முன்வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் மின்சார கட்டண உயர்வுக்கான பரிந்துரை வந்ததும், அமைச்சரவை இறுதி முடிவை எடுக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் உடனடி எதிர்காலத்தில் கட்டண உயர்வுக்கான சாத்தியக்கூறுகளை நிராகரித்த அமைச்சர் விஜேசேகர, அதற்கு இன்னும் சில வாரங்களாவது செல்லும் என்று தெரிவித்தார்.



