நாட்டைவிட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு.

0

நாட்டில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது.

இதன் காரணத்தால் நாட்டில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை 30 சதவீதமாக அதிகரித்திருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிலும் விசேடமாக கடல்வழியாக இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு செல்வது சுலபமான வழி என தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக வெளிநாடுகளுக்கு படகுகளில் செல்லக்கூடிய பிரதேசங்களில் கடற் படையினரின் ரோந்து சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

மேலும் இலங்கை விமானப் படையினரும் இந்நாட்களில் இதுகுறித்து விசேட கவனம் செலுத்தி வருவதாக விமானப்படை ஊடகப்பேச்சாளர் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply