வெளிநாடுகளில் குடிபெயர்வதற்கு கோரும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் வெளிநாடுகளில் குடியேறுவோரின் எண்ணிக்கை நூற்றுக்கு 30 வீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலைமையினை காரணமாக தெரிவித்தே பலர் வெளிநாடுகளில் குடியேறுவதற்கான கோரிக்கைகளை முன்வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் , வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமான முறையில் குடியேறுவதற்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



