மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 08 வருடங்களுக்கு மேலாக மின்சாரக் கட்டணம் திருத்தப்படாத நிலையில் தற்போது அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கான ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் கட்டணம் உயர்த்தப்பட்டால், பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மின்சார சபையின் வருமானம், செலவினை அடிப்படையாக கொண்டே மின் கட்டணம் அதிகரிக்கப்படும். மின் கட்டணம் மதிப்பீடு செய்த பின்னர் அரசாங்கத்திடம் அது சமர்ப்பிக்கப்படும்.
அரசாங்கம் ஆராய்ந்த பின்னர் மக்களிடம் சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னரே அதிகரிக்கப்படும். எனினும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.
மேலும் எரிவாயு, எரிபொருள், பால்மா போன்று நள்ளிரவுகளில் விலைகளை அதிகரித்து மக்களுக்கு சுமையை அதிகரிக்க மாட்டோம்.
ஆகவே மக்கள் அச்சமடைய வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



