ஜாதகம் இல்லாதவர்கள் தங்களுடைய வாழ்க்கையை சரியாக நடத்தி செல்ல, செய்ய வேண்டிய சின்னச்சின்ன ஆன்மீக ரீதியான பரிகாரங்கள் என்னென்ன?

0

ஜாதக கட்டம் இல்லாதவர்கள் மகான்களை வழிபாடு செய்வதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இதேபோல ஜாதகம் இல்லாதவர்கள் அடிக்கடி பெரியவர்களைக் கண்டால் அவர்களுடைய காலில் விழுந்து நமஸ்காரம் வாங்கிக் கொள்வது நல்லது.

ஜாதகம் இருப்பவர்களாக இருந்தால் கூட பெரியவர்களின் பாதங்களைப் பணிந்து நமஸ்காரம் வாங்கிக் கொள்வது சிறப்பான ஒரு விஷயம்தான்.

அடுத்தபடியாக பசுமாட்டிற்கு வெற்றிலை அருகம்புல் வாழைப்பழம் அகத்திக்கீரை போன்ற உங்களால் முடிந்த உணவு பொருட்களை வாங்கிக் கொடுத்து பசு மாட்டின் பின்பக்கத்தை தொட்டு வணங்குவது உங்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும்.

இதற்கு நாள் கிழமை எல்லாம் பார்க்க வேண்டாம். உங்களால் எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் பசுமாட்டிற்கு உணவுப் பொருட்களை வாங்கி கொடுத்துக்கொண்டே இருங்கள்.

ஜாதக கட்டம் இல்லாதவர்கள் அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய நல்லது கெட்டதை கணிப்பதற்கு பிரசன்ன ஜோதிடம் பார்க்கலாம்.

ஜாதகமே இல்லை என்றாலும் ஒருவருடைய வாழ்க்கையின் நல்லது கெட்டதை சரியான முறையில் கணிக்க பிரசன்ன ஜோதிடம் நமக்கு நல்வழி காட்டி தரும்

. எனக்கு ஜாதகமே இல்லை என்ற கவலை உங்களுக்கு இனி வேண்டாம்.

ஜாதகம் இல்லாதவர்களுக்கு அந்த இறைவனே எப்போதும் துணையாக இருக்க மேல் சொன்ன சின்ன சின்ன பரிகாரங்களை செய்து வந்தாலே போதும்.

உங்களுடைய வாழ்வு சிறப்படையும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

Leave a Reply