அரச ஊழியர்களின் சம்பளத்தைக் குறைப்பது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அரச நிறுவனங்களுக்கான செலவினங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக த் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த விடயம் தொடர்பில் விசேட சுற்றறிக்கை நிதி அமைச்சின் செயலாளரினால் அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது



