என்ன செய்தாலும் இறைவனிடம் வேண்டியது நிறைவேறவில்லை என்ற கவலையா?

0

மிக சிறிய அளவிலான பாக்குமட்டை தட்டு ஒன்றை எடுத்துக்கொண்டு, அதில் சுத்தமான பச்சரிசியை சிறிதளவு நிரப்பிக்கொள்ள வேண்டும்.

அச்சில் வார்க்கப்பட்ட சதுரமான வெல்லக்கட்டி ஒன்றை எடுத்து, அதற்கு சந்தன, குங்குமப் பொட்டிட்டு, அந்த வெல்லக்கட்டியின் மேற்புறத்தை சிறிதளவு தோண்டி எடுத்து, அந்த குழியில் சிறிது பசுநெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி விநாயகரை மனதார வழிபட வேண்டும்.

உங்களுக்கு என்னென்ன கோரிக்கைகள் நிறைவேற வேண்டுமோ அதற்கேற்றார் போன்ற பொருட்களை பாக்குமட்டை தட்டில் வெள்ளை தீபத்திற்கு அடியில் இருக்கின்ற அரிசியில் வைக்க வேண்டும்.

உதாரணமாக திருமணம் விரைவில் ஆகவேண்டும் என்கிற வேண்டுதல் நிறைவேற, அந்த அரிசியில் மஞ்சள் கிழங்கு கட்டிய தாலி கயிரையோ அல்லது தாலி சரடையோ அரிசியின் மீது வைக்க வேண்டும்.

சொத்து பிரச்சனை, கோர்ட் வழக்குகள் தொடர்பான பிரச்னைகள் விரைவில் தீர உங்கள் கோரிக்கையை ஒரு சிறிய அளவு காகிதத்தில் எழுதி, அந்த காகிதத்தை அந்த அரிசியில் வைக்க வேண்டும்.

கடன் பிரச்னை, பணக் கஷ்டங்கள் தீர 2 நாணயங்களை அந்த அரிசியின் மீது வைத்து தீபமேற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

தினமும் இந்த பரிகார வழிபாடு செய்பவர்கள் அந்த பாக்கு மட்டையில் இருக்கின்ற பழைய அரிசியை மாற்றி புது அரிசியை போட்டு வைக்க வேண்டும்.

பழைய அரிசியை எடுத்து ஏதேனும் ஒரு பாத்திரத்தில் போட்டு சேர்த்து வைக்க வேண்டும்.

இப்படி தினமும் சேர்த்து வைத்த அரிசியை எடுத்து சில நாட்கள் கழித்து ஏழை, எளியவர்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும் அல்லது நீங்களே உங்கள் வீட்டில் அந்த அரிசியை கொண்டு சர்க்கரை பொங்கல் செய்து பிரசாதமாக சாப்பிட வேண்டும்.

வசதி படைத்தவர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேற தினமும் இந்த வழிபாட்டை செய்யலாம். மற்றவர்கள் மாதந்தோறும் வருகின்ற வளர்பிறை, தேய்பிறை சதுர்த்தி தினங்களிலும் புதன்கிழமை அல்லது வெள்ளிக்கிழமைகளிலும் இந்த தாந்திரிக பரிகார வழிபாட்டை செய்யலாம்.

Leave a Reply