இலங்கையில் அத்தியாவசிய பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது.
இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளவதில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்றுக்கொள்ளும் துர்ப்பாக்கிய நிலை நீடித்து வருகிறது.
அத்துடன் எரிபொருள், உரம் மற்றும் எரிவாயு வரிசைகளை தொடர்ந்து தற்போது ஒரு புதிய வரிசையும் இணைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் பல இடங்களில் நேற்றைய தினம் நீண்ட வரிசையில் சவர்க்காரத்திற்காக மக்கள் காத்திருக்கும் சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
சிலர் 2,000, 3,000 மற்றும் 5,000 ரூபாய்க்கு மேல் சவர்க்காரம் கொள்வனவு செய்வதனை அவதானிக்க முடிந்துள்ளது.



