
புதிய வீட்டிற்கு குடித்தனம் போகக்கூடாத மாதங்கள் என்று ஒரு சில மாதங்கள் இருக்கின்றன. அந்த மாதத்தை பற்றியும், அந்த மாதத்தில் ஏன் குடியேறக்கூடாது? என்பதற்கான காரணத்தையும் பார்க்கலாம்.
புதிய வீட்டிற்கு குடித்தனம் போகக் கூடாத மாதங்கள்: ஆடி, மார்கழி, புரட்டாசி, மாசி, பங்குனி, ஆனி.
ஏனெனில் ராவண சம்ஹாரம் ஆடி மாதத்தில் நடந்தது.
பாரதபோர் மார்கழி மாதத்தில் நடந்தது.

இரணிய சம்ஹாரம் புரட்டாசி மாதத்தில் நடந்தது.
பரமசிவன் ஆலகால விஷம் அருந்தியது மாசி மாதம்.
மன்மதனை சிவபெருமான் நெற்றிக் கண்ணால் எரித்த சம்பவம் பங்குனி மாதத்தில் நடந்தது.
மகாபலிச் சக்கரவர்த்தி தனது ராஜாங்கத்தை இழந்து பாதாளத்திற்கு போன சம்பவம் ஆனி மாதத்தில் நடந்தது.
ஆகையால் இந்த மாதங்களில் புது வீடு அல்லது வாடகை வீட்டுக்கு குடியேறினால் அந்த குடும்பம் துன்பமும், துயரமும் அடையும் என்பது நம்பிக்கை. – Source: Maalaimalar
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
