மாதத்தின் முதல் நாள் உங்கள் பண பர்ஸில் பணம் நிறைந்து பெரியதாக இருக்கும். ஆனால் இரண்டு நாட்களில் பணம் அனைத்தும் கரைந்து உங்கள் பாக்கெட்டில் மணிபர்ஸ் இருக்கின்றதா? இல்லையா? என்பதே தெரியாத அளவிற்கு லேசாக மாறிவிடும்.
அவ்வாறு பணத்திற்கான செலவுகள் முன்கூட்டியே வரிசையாக நிற்க ஆரம்பிக்கும்.
இந்த மாதமும் ஏதாவது பணம் மீதம் இருந்தால் இதை செய்ய வேண்டும் என்று நீங்கள் ஆர்வமாக இருந்தாலும் அதனை உங்களால் செய்ய முடியாது.
இவ்வாறு பலரும் தங்கள் கனவுகளை நிறைவேற்ற முடியாமல் அதனை அவர்களின் மனதுக்குள்ளேயே வைத்துக் கொள்கிறார்கள்.
இதற்கு காரணம் பணம் மட்டும் தான். இந்தப் பணம் உங்களிடம் வருவது அதிகமாகி விட்டால் உங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேறும்.
இந்தப் பணத்தை ஈர்ப்பதற்கு லட்சுமி கடாட்சம் நிறைந்த மங்களப் பொருட்கள் பெரும் துணையாக அமைகிறது.
அதற்கு முதலில் நாட்டு மருந்துக் கடைக்குச் சென்று அங்கு புனுகு, ஜவ்வாது இவை இரண்டையும் வாங்கிக்கொள்ள வேண்டும்.
இந்த இரண்டு பொருட்களும் ஆன்மீக பூஜைகளில் பெரிதளவில் இடம்பெறுகின்றன.
அடுத்ததாக சிறிதளவு நெய்யை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் சிறிதளவு ஜவ்வாது, சிறிதளவு பூனுகு, சிறிதளவு நெய் இவை மூன்றையும் ஒன்றாகக் கலந்து மை போன்று தயார் செய்ய வேண்டும்.
பின்னர் குழந்தைகள் பயன்படுத்தும் சார்ட் பேப்பரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆண்கள் தங்கள் பர்ஸில் வைப்பதாக இருந்தால் சார்ட் பேப்பரை வட்ட வடிவில் வெட்டிக்கொள்ள வேண்டும். பெண்கள் பயன்படுத்துவதாக இருந்தால் சார்ட் பேப்பரை நெற்றியில் வைக்கும் திலக வடிவில் வெட்டிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஆண்கள் பயன்படுத்தும் பேப்பரில் ஒரு புறம் ஓம் என்றும், மற்றொரு புறம் ஸ்ரீம் என்றும் எழுத வேண்டும்.
பெண்கள் பயன்படுத்தும் பேப்பரில் ஒரு புறம் ஸ்ரீம் என்றும், மறுபுறம் ம் என்றும் எழுத வேண்டும்.
பிறகு இந்த மையை பேப்பரின் இரு புறங்களிலும் தடவி அதனை ஒரு கவரில் வைத்து, பூஜை செய்து விட்ட பின்னர் உங்கள் பர்சில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்து வைத்துக் கொண்டால் விரைவில் உங்களிடம் பணம் அதிகரித்துக் கொண்டே இருப்பதை உணர முடியும்.
