தமிழகத்தில் கொவிட் தொற்றின் தாக்கம் நாட்டில் கடந்த சிலநாட்களாக குறைந்து வந்தது .
இந்நிலையில் பல மாநிலங்களில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால், மாநில அரசுகள் கட்டுப்பாடுகள் பரவலாக தளர்த்தியது.
குறிப்பாக முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என பல மாநிலங்கள் அறிவித்துள்ளது
அத்துடன் டெல்லி, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் கொரோனா பரவலின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்



