உங்கள் வீட்டு பூஜை அறைக்கு சென்று ஒரு மண் அகல் விளக்கு எடுத்துக்கொள்ளுங்கள்.
அதில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். அந்த நல்லெண்ணெயில் இரண்டு சிட்டிகை சுக்குப்பொடி போட்டு விடுங்கள்.
நாட்டு மருந்து கடைகளில் சுக்குப்பொடி விற்கின்றது அதை வாங்கி அதில் இருந்து 2 சிட்டிகையை நல்லெண்ணெயில் போட்டு திரி போட்டு குலதெய்வத்தை மனதார நினைத்து கொண்டு இந்த தீபத்தை ஏற்றி விடுங்கள்.
நீங்கள் யாருக்கு கடன் கொடுக்க வேண்டுமோ அந்த நபரின் பெயரை நினைத்து, அந்த நபருக்கு என் கையால் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.
ஆனால் அதற்கான சந்தர்ப்பமும் சூழ்நிலையும் சேமிப்பும் வருமானமும் எனக்கு அமையவில்லை. எப்படியாவது அந்த கடன் தொகையை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று முழுமனதோடு பிரார்த்தனை செய்து கொண்டால் நிச்சயமாக உங்களுடைய கடன் பிரச்சனை படிப்படியாகக் குறையத் தொடங்கும்.
இதேபோல்தான் கடனை வசூல் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இந்த தீபத்தை உங்களுடைய வீட்டில் ஏற்றிவைத்து விட்டு, நீங்கள் யாருக்கு கடன் கொடுத்து இருக்கிறீர்களோ அந்த நபரை மனதார நினைத்துக்கொண்டு ‘கடன் வாங்கியவருக்கு, கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டிய சாதகமான சூழ்நிலை சீக்கிரமாகவே அமைந்து விட வேண்டும். என்று குலதெய்வத்திடம் வேண்டிக் கொள்ளுங்கள்’.
நம்மிடம் கை நீட்டி பணம் வாங்கியவர் நன்றாக சம்பாதித்து சந்தோஷமாக இருந்தால் தான், நம்மிடம் வாங்கிய கடனை திருப்பிக் கொடுப்பார்.
ஆகவே அவருடைய நலனுக்காக வேண்டிக்கொண்டு நாம் தீபம் ஏற்றுவது தவறு கிடையாது. தொடர்ந்து 48 வாரங்கள் இந்த தீபத்தை உங்களுடைய வீட்டில் நம்பிக்கையோடு ஏற்றி வாருங்கள்.
வருடக்கணக்கில் வாராக் கடனாக இருந்த தொகை வசூல் ஆகும்.
வருடக்கணக்காக என்னால் இந்த கடனை திருப்பிக் கொடுக்க முடியவில்லையே என்று நினைப்பவர்களுடைய கடன் கூட நாற்பத்தி எட்டு வாரங்களில் சீக்கிரம் அடையும் என்பது தான் நம்பிக்கை.
இழந்த பணத்திற்கு மட்டும்தான் இந்த தீபம் ஏற்ற வேண்டுமா என்று கேட்டால் நிச்சயம் இல்லை.
நீங்கள் இழந்த பொன் பொருள் சொத்து எதுவாக இருந்தாலும் அது திரும்பவும் மீட்டெடுக்க வேண்டும் என்று இந்த தீபத்தை ஏற்றலாம்.
அடமானத்தில் இருக்கும் நகை சொத்தை மீட்கவும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.
நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை அனைவரும் செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.
