டெல்லி ஆசாத் மார்க்கெட் பகுதியில் பயங்கர தீ விபத்து.

0

டெல்லி ஆசாத் மார்க்கெட் பகுதியில் உள்ள மூன்று கட்டிடங்களில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த தீ விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

இதுதொடர்பாக காவற்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, தீயணைப்பு வீரர்கள் வாகனங்களுடன் விரைந்தனர்.

சம்பவ இடத்திற்கு, 20 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்த வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பின்னர், சுமார் 7.30 மணியளவில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதில், 6 தீயணைப்பு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த தீ விபத்தில், கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளதாகவும், இருப்பினும் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவற்துறையினர் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply