நாடளாவிய ரீதியில் இன்று அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பொதுத்துறை ஊழியர்களுக்கு அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்புக்கை முன்னெடுப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொது மற்றும் அரச அங்கீகார பொதுத்துறை ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் இன்று பிற்பகல் கொழும்பு லிப்டனில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது
ஆகவே பொது மக்கள் தமது பணிகளை செய்து கொள்வதற்காக இன்று அரச நிறுவனங்களுக்கு வந்தால் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் இணை அழைப்பாளர் உதேனி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.



