பிரியங்கா சோப்ராவுடன் காதல் மலர்ந்த தருணங்கள் குறித்து: நிக் ஜோன்ஸ்!

0

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கும் அவரை விட 10 வயது குறைந்த அமெரிக்காவை சேர்ந்த பாப் பாடகர் நிக் ஜோன்ஸூம் காதலித்துவந்தனர். பின்னர் கடந்த மாதம் இருவருக்கும் அமெரிக்காவில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில் முதன் முறையாக தனக்கும் பிரியங்கா சோப்ராவுக்கும் காதல் மலர்ந்த தருணங்களை நிக் ஜோன்ஸ் மீடியாவுக்கு பகிர்ந்து கொண்டார்.

இதுகுறித்து தனியார் செய்தித் தளத்துக்கு பேட்டியளித்த அவர், நானும் பிரியங்கா சோப்ராவும் நண்பர் ஒருவர் மூலம் அறிமுகமானோம். இருவரும் செல்போன் எண்களை பறிமாறிக் கொண்டோம்.
பின்னர் 6 மாதமாக நாங்கள் சந்தித்துக் கொள்ளவில்லை. பின்னர், இருவரும் மெசேஜ் செய்துகொண்டோம்.

பின்னர் கடந்த வருடம் மே மாதம் ஒருவிழாவில் சந்தித்தோம். மிக அருமையாக அந்த பொழுது கழிந்தது. பின்னர் பல்வேறு தருணங்களில் ஒன்றாக பொழுதை கழித்தோம்.

அதனையடுத்து நாங்கள் காதலிப்பதாக எங்களை சுற்றிலும் வதந்திகள் பரவ ஆரம்பித்தது.

எங்கள் உறவு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. நாங்கள் காதலிப்பதும் வெளியே தெரிந்தது, என்றார்.- Source: tamil.eenaduindia.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply