அதிர்ஷ்டம் என்பது நம்மை தேடி வர நம்மைச் சுற்றி எப்பொழுதும் நேர்மறை அதிர்வுகள் நிலவிக் கொண்டிருக்க வேண்டும்.
அதற்கு நாமும் நம்மைச் சுற்றியுள்ளவர்களும் எப்பொழுது எதிர்மறையாக யோசிக்காமல் நேர்மறையாக யோசிக்கவேண்டும். எதனையும் நன்மையாகவே எடுத்துக்கொள்ளவேண்டும்.
எப்பொழுதும் எனக்கு இவை நடக்கவே நடக்காது, எனக்கு மட்டும்தான் இப்.படி நடக்கும் என்ற எதிர்மறை எண்ணங்களை வைத்திருக்கக் கூடாது.
அதுமட்டுமல்லாமல் எப்பொழுதும் பூஜை செய்வதை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு நாம் இறைவனை வணங்கி பூஜை செய்யும் பொழுது நம் உடலிலிருந்து பலவிதமான நேர்மறை அதிர்வுகள் வெளியேற ஆரம்பிக்கும்.
இவை நமது வீடு முழுவதும் நிரம்பி இருக்கும். இதனால் நம்மை சுற்றி நடக்கும் அனைத்து விஷயங்களும் நன்மையாகவே நடக்கும்.
அவ்வாறு நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொரு சிறிய விஷயங்களிலும் கவனம் செலுத்தினோம் என்றால் அனைத்தும் நன்மையாகவே இருக்கும்.
அப்படி சில செடி வகைகளையும் நாம் வீட்டில் வைத்துக் கொள்வதன் மூலம் நமது அதிர்ஷ்டம் அதிகரிக்கிறது.
எனவே தான் பலரும் துளசிச் செடியை வீட்டில் வைத்து வணங்கி வருகிறார்கள். துளசி மகா லட்சுமி தேவிக்கு பிடித்த ஒரு செடியாகும்.
அதனால்தான் இந்த துளசி பெருமாளுக்கு பூஜை செய்யப் பயன்படுகிறது.
எனவே அனைவரும் தங்கள் வீட்டில் துளசி செடியை வைத்து முறையாக பூஜை செய்ய வேண்டும்.
பிறகு இதனுடனே சேர்த்து தொட்டா சிணுங்கி செடியையும் வளர்த்து வந்தால் மிகவும் விசேஷமாக அமையும்.
இந்த தொட்டாசிணுங்கி தாவரம் வேண்டும் வரத்தை கொடுக்கிறது.
துளசி மற்றும் தொட்டாசிணுங்கி செடியை வீட்டில் வைப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றிற்கு தண்ணீர் ஊற்றும் பொழுது நமக்கு வேண்டியவை நிறைவேறியதாக எண்ணி தண்ணீர் ஊற்றவேண்டும்.
இவற்றிடம் எனக்கு இது கிடைத்து விட்டது, என் வியாபாரம் நல்லபடியாக நடந்து விட்டது,
எனது குழந்தைகள் நலமாக இருக்கிறார்கள் என்று உங்களுக்கு வேண்டிய விஷயங்கள் நடந்து விட்டது போல் பேச வேண்டும்.
அதிலும் தொட்டாசிணுங்கி செடியை தொடும் பொழுது இவ்வாறு பேசுவதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த இரண்டு செடிகளும் உங்கள் வாழ்வில் பெரிய அதிர்ஷ்டத்தைக் வந்து சேர்க்கும்.
