மிகவும் அத்தியாவசிய சேவைகளை மட்டும் முன்னெடுத்துக் கொண்டு நாட்டை முடக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்கமாக கோரிக்கை
இந்நிலையில் மிகவும் அத்தியாவசிய சேவைகளை மட்டும் முன்னெடுத்துக் கொண்டு நாட்டை முடக்க வேண்டுமென கோரியுள்ளார்.
அத்துடன் இலங்கை மின்சாரசபையின் நிர்வாகம் விசேட நிபுணர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
அரசாங்கத்தின் பிழையான தீர்மானங்கள் மற்றும் நடவடிக்கைகளினால் இலங்கை மின்சாரசபை பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகிறது.
எதிர்வரும் மே மாதம் பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பமாகும்.
அதுவரையில் நாட்டில் முடக்க நிலையை அமுல்படுத்த வேண்டும்.
மேலும் கோவிட் காலத்தைப் போன்று முடக்க நிலை அறிவிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.



