இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கைக்கு வரவிருக்கும் டீசல் கையிருப்பை மின்சார சபைக்கு வழங்குவதற்கு உறுதியளித்துள்ளது.
இதன் பிரகாரம் நாளைமுதல் மின்வெட்டு நேரம் குறைக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.சி.பெர்டினாண்டோ தெரிவித்தார்.
அத்துடன் நாளை முதல் நான்கு மணி நேரத்துக்கும் குறைவான மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய மின்சார சபையினால் தற்போது முடியாது எனவும் தற்போது நிலக்கரி மின் உற்பத்தி மூலம் தேவையைப் பூர்த்தி செய்து வருவதாகவும் கூறினார்.
நீர் மின் நிலையங்கள் மூலம் 300 மெகாவோட் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும் என்று கூறிய அவர், மாலை 6:30 மணி முதல் இரவு 10 மணி வரை 800 மெகாவாட் தேவைப்படுவதாகவும் நீர் மின் மூலம் அதை நிறைவேற்ற முடியாது என்றும் கூறினார்.
அனல் மின் நிலையங்கள் தேசிய மின் கட்டமைப்புக்கு 1,100 மெகாவோட் வழங்குகின்ற போதும் எரிபொருள் பற்றாக்குறையால் அதுவும் பாதிக்கப்படுகிறது என்றார்.



