எதிர்வரும் தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு இயன்றளவு மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளது.
அத்துடன் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் நாட்டில் விசேட போக்குவரத்து வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் பயணத்தின் போது கோவிட் சட்ட விதிகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.



