தலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இடம்பெறும் முக்கிய கூட்டம்.

0

சென்னை தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்ந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இதற்கமைய குறித்த கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.

இந்த ஆலோசனையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும் குறித்த கூட்டத்தில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

Leave a Reply