இணையதளத்தை முடக்கிய விஜய் ரசிகர்கள்.

0

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகரில் ஒருவராக விளங்குபவர் தான் நடிகர் விஜய்,

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

மேலும், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தில் இருந்து முதல் பாடலான ‘அரபிக்குத்து’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, யூடியூப்பில் சாதனையும் படைத்தது.

அதனை தொடர்ந்து அனிருத் இசையில் நடிகர் விஜய் பாடியிருக்கும் ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் பீஸ்ட் படத்திற்கு சிபிஎப்சி குழு நேற்று யு/ஏ தணிக்கை சான்றிதழை வழங்கியதாக தகவல் வெளியாகியது.

மேலும் இதன் பின்னர் படத்தின் தணிக்கை சான்றிதழும் இணையத்தில் கசிந்தது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் பீஸ்ட் படத்தின் தணிக்கை சான்றிதழை விஜய் ரசிகர்கள் அதிகளவு தேடியதில் சிபிஎப்சி இணையதளம் முடங்கியது.

Leave a Reply