உங்களுடன் சண்டை போடும் எந்த உறவாக இருந்தாலும் சரி, அந்த உறவு உங்களிடம் சண்டை போடாமல் இருக்க வேண்டும்,
உங்களோடு சமாதானத்தோடு செல்ல வேண்டும் என்று அந்த அம்பாளை நினைத்து கொண்டு தினந்தோறும் இந்த பச்சை குங்குமத்தை நெற்றியில் இட்டு வர, உங்களுடைய உறவு வலுப்பெறும்.
சண்டை படிப்படியாக குறையத் தொடங்கும். உதாரணத்திற்கு கணவன் மனைவிக்குள் பிரச்சனை. நீண்ட நாட்களாக ஒரே வீட்டில் தான் இருக்கிறார்கள்.
ஆனால் சரிவர பேச்சு வார்த்தை கிடையாது. மனைவிக்கு கணவனிடம் பேச வேண்டும் என்ற ஆசை உள்ளது என்றால், ‘என் கணவர் என்னிடம் பாசமாக நடந்து கொள்ள வேண்டும்.
என்னிடம் பேச வேண்டும்’. என்று நினைத்துக் கொண்டு தினமும் இந்த பச்சை குங்குமத்தை மனைவி நெற்றியில் இட்டு வர வேண்டும்.
நிச்சயமாக ஒரு சில நாட்களில் உங்களுடைய கணவர் உங்களிடம் வந்து பேசுவார்.
மாணவர்களுக்கு ஏதாவது படிப்பதில் கஷ்டம் இருந்தால், கஷ்டமான பரிட்சைக்கு செல்கிறீர்கள் என்றால் அன்றைய தினம் இந்த பச்சை குங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொண்டு சென்றாலும் உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டம் சுலபமாக மாறும்.
பச்சை நிறம் என்பது புதன் பகவான், புதன் கிரகத்துக்கு உரிய நிறமாக சொல்லப்பட்டுள்ளது. அறிவுத் திறனை அதிகரிக்கவும், புத்திசாலித்தனம் வெளிப்படும்.
புதன் கிழமையில் பிறந்தவர்கள் புதன் திசையில் பிறந்தவர்கள் பஞ்சமி திதியில் பிறந்தவர்கள், அமாவாசை பவுர்ணமி தினத்தில் பிறந்தவர்கள் தினமும் இந்த பச்சை குங்குமத்தை நெற்றியில் இட்டு வந்தால் அவர்களுக்கு நிறைய நல்லது நடப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.
ஆயில்யம், கேட்டை, ரேவதி, இந்த மூன்று நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பொதுவாகவே நன்மைகள் நடக்கும்.
அது கூடவே சில சங்கடங்களும் சேர்ந்து வரும் என்பது ஜோதிட ரீதியாக சொல்லப்படும் கருத்து.
இந்த மூன்று நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தினம்தோறும் பச்சை நிற குங்குமத்தை நெற்றியில் இட்டு வந்தால் வாழ்வில் வரும் சிக்கல்கள் குறையும். நம்பிக்கையோடு செய்தால் நல்ல பலன் உண்டு என்ற கருதுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.
