இலங்கையில் மிகவும் பிரசித்தி வாய்த்த அரச தொலைக்காட்சியான ரூபவாஹினி கூட்டுத்தாபனம் 240 மில்லியன் ரூபாவை வழங்குமாறு திறைசேரியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் முதல் எதிர்வரும் ஜூலை மாதம் வரையிலான செலவுகளை ஈடுகட்டவே இவ்வாறு 240 மில்லியன் பணம் கோரப்பட்டுள்ளது.
அத்துடன் கூட்டுத்தாபனத்தின் வருமானம் குறைந்துள்ளதால் சம்பளம் மற்றும் இதர செலவுகளுக்கு போதிய வருவாய் இல்லை என கூட்டுத்தாபனம் திறைசேரிக்கு தகவல் தெரிவித்துள்ளது.
தற்போது ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் வரவுக்கும் செலவுக்கும் இடையிலான இடைவெளி சுமார் 65 மில்லியன் ரூபாவாகும்.
மேலும் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் 900 பேர் பணிபுரிவதுடன், அவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு மட்டும் மாதம் 90 மில்லியன் ரூபா செலவிடப்படுகிறதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



