எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகள் எப்போது இடம்பெறும் என்பது தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் 22ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்றைய தினம் கட்சித் தலைவர்களுடனான கூட்டம் நடைபெற்றது.
இதன்போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார சீர்கேடு குறித்தும் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



