நிறைய பேர் வீடுகளில் குடும்பத்தோடு வெளியே செல்வதாக இருந்தால், எல்லோரும் சேர்ந்து ஒன்றாக வீட்டை விட்டு வெளியே வரவே மாட்டாங்க. கேட்டால், ஊர் கண் பட்டுவிடும் என்று சொல்வார்கள்.
எல்லாம் ஊர் கண் திருஷ்டிக்கு பயந்துதான். ஒருவர் கண்ணை போல மற்றவர்கள் கண் இருக்காது.
கண் திருஷ்டியின் மூலம் குடும்பத்திற்கு ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ என்ற பயம்.
இவ்வளவு விஷயங்களை பார்த்து பார்த்து செய்தாலும் நம்முடைய வீட்டில் சில நேரங்களில் சின்ன பிரச்சனை கூட, பெரிய சண்டையாக மாறிவிடும். வீட்டில் இருக்கும் நிம்மதி போய்விடும்.
உங்களுடைய வீட்டில் ஒரு சந்தோஷமான விசேஷம் நடந்தால், கூடவே சண்டை சச்சரவும் வந்து விடும். கண் திருஷ்டி படக்கூடாது.
வீட்டில் சண்டை சச்சரவுகள் வரக்கூடாது. வீட்டில் நிம்மதி நிலைத்து இருக்க, எந்த தீபத்தை ஏற்றி என்ன வழிபாடு செய்வது.
மனதார உங்களுக்கு இஷ்டமான அம்பாளை வேண்டிக் கொள்ளுங்கள். குலதெய்வத்தை வேண்டிக் கொள்ளுங்கள்.
கொஞ்சமாக மஞ்சளில் பன்னீர் ஊற்றி குழைத்துக் கொள்ள வேண்டும்.
நிலை வாசலுக்கு அருகில் தரையில் ஒரு சிறிய இடத்தை ஈரத்துணி போட்டு துடைத்து விடுங்கள்.
கரைத்து வைத்திருக்கும் மஞ்சளை உங்களுடைய விரலில் தொட்டு, அந்த தரையில் திரிசூலம் வரைந்து கொள்ளுங்கள்.
ஈரமான மஞ்சளில் வரைந்த திரிசூலம் சிறிது நேரம் ஆரட்டும்.
அதன்பின்பு, அந்த சூலத்தின் மேலே கொஞ்சம் வேப்ப இலைகளை போட்டு, அதன் மேலே மண் அகல் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி, மஞ்சள் திரி போட்டு, தீபம் ஏற்றவேண்டும். அம்மனை மனதார வேண்டிக்கொண்டு ‘எங்கள் வீட்டில் சண்டை சச்சரவுகள் இருக்கக்கூடாது.
வீட்டிற்குள் கண் திருஷ்டி, கெட்ட சக்தியோ நுழையக்கூடாது. குடும்பம் சந்தோசமாக இருக்க வேண்டும்.’
என்று நினைத்து தீபத்தை ஏற்றி கிழக்கு பார்த்தவாறு வைத்து விடுங்கள். – இதேபோல தினமும் 48 நாட்கள் தொடர்ந்து செய்து வர வேண்டும். இந்த தீபத்தை காலையிலும் ஏற்றலாம்.
காலையில் நேரம் இல்லை என்று சொல்லுபவர்கள், மாலை வெறும் ஏற்றலாம்.
தினம் தினம் பழைய சூலத்தை துடைத்துவிட வேண்டும். தினம் தினம் புதிய வேப்பிலைகளை வைக்க வேண்டும்.
ஒரே மண் அகல் விளக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
தினமும் தீப தரியை மாற்றிக் கொள்ளுங்கள்.
இப்படி செய்து வர வீட்டில் நிம்மதியான சூழல் நிலவும்.
சண்டை சச்சரவுகள் படிப்படியாகக் குறையத் தொடங்கும்.
குறிப்பாக கணவன் மனைவி ஒற்றுமை இல்லை. அடிக்கடி சண்டை வரும் என்றாலும் இந்த தீபத்தை ஏற்றலாம்.
அம்பாளின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம். நல்லதே நடக்கும்.
