எரிபொருளின் விலையேற்றம் தொடர்பில் பேச்சுவார்த்தை.

0

லங்கா ஐ. ஓ. சி நிறுவனம் தற்போது எரிபொருளின் விலை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கனிய வள கூட்டுத்தாபன எரிபொருளின் விலையும் அதிகரிப்பதா? அல்லது விலை அதிகரிப்பு இன்றி அவ்வாறே தொடர்ந்து செல்வதா என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

இதற்கமைய குறித்த பேச்சுவார்த்தை இன்று இடம்பெற உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

அத்துடன் இது தொடர்பில் முதலாவதாக இலங்கை கனிமவள கூட்டுத்தாபன தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக வலு
சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இது குறித்து நிதி அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .

மேலும் லங்கா ஐ. ஓ. சி நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் தனது விலையை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply