பெண்கள் தங்களின் காலில் தங்கத்தை அணிவதால் உண்டாகும் ஆபத்துக்கள் பற்றி தெரியுமா?

0

நம்முடைய வீட்டிற்கு வருகின்ற விருந்தாளிகளை, உறவினர்களை ஏன் இன்முகத்துடன் வரவேற்கிறோம்?

வீட்டிற்குள் வந்தவுடன் அவர்களுக்கு தண்ணீர் கொடுத்து, காபி கொடுத்து மற்றும் விருந்து கொடுத்து இவ்வாறு தகுந்த மரியாதைகள் செய்வது ஏன்?

இவ்வாறு செய்வதனால் தான் நாம் அந்த உறவைத் எந்த அளவிற்கு மதிக்கிறோம் என்பது அவர்களுக்குப் புரியும்.

அப்போது தான் அவர்களின் மனம் மகிழ்ச்சியடையும்.

அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கும் நமக்கும் இருக்கும் உறவு பலப்படும்.

அத்துடன் அவர்கள் மீண்டும் மீண்டும் நமது வீட்டிற்கு வரவேண்டும்,
இவர்களுடனே நமது நாட்களை செலவிட வேண்டும் என்று தங்கள் மனதில் ஆழமாக பதித்துக் கொள்வார்கள்.

அதுபோலதான் தங்கமும் எவர் ஒருவர் தன்னை மதிக்கின்றார்களோ அவரிடம் தான் அது பலவாறு பெருகிக்கொண்டே இருக்கும்.

இல்லையெனில் விரைவில் அவர்களை விட்டு அகன்று விடும்.

தங்கம் என்பது மனிதனின் ஆன்மாவை போல் சுத்தமானதாகும்.

ஒரு மனிதனின் உடல் மட்டும்தான் அழியுமே தவிர அவரது ஆன்மா மற்றொரு உடலுக்கு சென்று, மறுபிறவியாக இந்த பூமியில் அவதரிப்பான்.

அதுபோலத்தான் தங்கத்தை நெருப்பிலிட்டாலும் அதன் தன்மை என்றும் மாறுவதில்லை.

இவ்வாறு தங்கம் வளையல், கம்மல், செயின் இவ்வாறு பல வடிவங்களில் அதன் உருவம் மாறுமே தவிர அதன் தன்மை என்றும் மாறுவது கிடையாது.

இப்படி பவித்ரமான, புனிதமான தங்கத்தை நமது உடலில் எந்த இடத்தில் அணிய வேண்டும் என்பதில் சில வரைமுறைகள் இருக்கின்றன.

இடுப்பிற்கு மேல் உள்ள அனைத்து பகுதிகளும் தங்கம் அணிவதற்கான தகுந்த இடமாகும்.

இடுப்பிற்க்கு கீழுள்ள பிற பகுதிகளில் தங்கத்தை நாம் அணியக் கூடாது. அவ்வாறு அணியக்கூடிய கொலுசு, மெட்டி அத்துடன் இடுப்பில் அணியக்கூடிய அருணாக்கொடி இவை அனைத்தையும் தங்கத்தில் அணிவதென்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அணிவது தங்கத்தை நாம் மதிக்காமல் இருப்பதற்கு சமமாகும்.

எனவே இந்த தங்கம் விரைவில் நம்மை விட்டு விலகி விட வாய்ப்புகள் அதிகமாக உருவாகிக்கொண்டே வரும்.

Leave a Reply