இலங்கையில் பொதுமக்கள் பட்டினியால் உயிரிழக்கும் அபாயம்.

0

இலங்கையில் பொதுமக்கள் பட்டினியால் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொறுப்பற்ற தலைமைத்துவத்தினால் இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட வாய்ப்புள்ளது.

அத்துடன் நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு செல்லும் போது பணவீக்கம் 20 சதவீதமாக உயரும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வர்த்தக பீடத்தின் வணிகப் பொருளாதாரப் பிரிவின் தலைவர் பேராசிரியர் ஜனக் குமாரசிங்க பொருளாதார நிலைமை தொடர்பான முக்கிய தகவல்களை வெளியிட்டார்.

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு மக்களின் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்துள்ளார்.

நாட்டின் பணவீக்கம் தற்போது 16.8 சதவீதமாக இருக்கும் நிலையில், அது 20 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது எரிவாயு, பெற்றோல் உட்பட பல பொருட்களின் விலைகளை உயர்த்தும் என பேராசிரியர் ஜனக் குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

சமகால அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் நாட்டின் குடிமக்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் மேலும் விலை உயர்வு ஏற்பட்டால் பட்டினி கிடக்கும் அபாயம் உள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டது.

எரிபொருள் பற்றாக்குறையால் பல உணவகங்கள் மற்றும் பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன.

இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply