சூர்யா நடிபில் அடுத்து வெளிவர இருக்கும் படம் தான் எதற்கும் துணிந்தவன் திரைப்படமாகும்.
குறித்த திரைப்படத்தினை பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.
இப்படம் வரும் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
அதன் பின் பாலா மற்றும் வெற்றிமாறன் ஆகியோரின் படங்களில் நடிக்கவுள்ளார்.
இதனை தொடர்ந்து மீண்டும் சுதா கொங்கராவுடன் சூர்யா இணையவுள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியாகவிருக்கும் ‘செல்ஃபீ’ படத்தில் கெளதம் மேனன் மற்றும் ஜி.வி பிரகாஷ் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படம் குறித்து சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர்களுடன் ஜி.வி பிரகாஷ் கலந்துரையாடினார்.
அப்போது ரசிகர் ஒருவர் சூர்யா-சுதா கொங்கரா இருவரின் அடுத்த படம் குறித்து கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ஜி.வி பிரகாஷ், “கண்டிப்பாக இருவரும் இணைகிறார்கள்,
இந்த வருடத்தில் இறுதியில் இப்படத்திற்கான அறிவிப்பு வரலாம், அதற்கான வேலைகள் நடந்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.



