பணத்தை ஈர்ப்பது என்றால் முதலில் என்னவென்று தெரிந்து கொள்வோம்.
பணத்தை ஈர்ப்பது என்பது காந்தம் இரும்பை ஈர்ப்பது போல் பணத்தை ஈர்க்கும் செயல் அல்ல.
பணம் நம்மிடம் வருவதற்கான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுப்பதும், பணத்தைச் சம்பாதிப்பதற்கான ஆற்றலை கொடுப்பதும், பணத்தை பெருக்குவதற்கான தொழிலை முன்னேற்றி கொடுப்பதற்கான சூழ்நிலையை கொண்டுவருவதுதான் பணத்தை ஈர்ப்பது என்று அர்த்தமாகும்.
இவ்வாறான அனைத்து விஷயங்களும் சரியாக அமைந்துவிட்டால் பணம் நம் கையில் பல மடங்கு சேர்ந்துவிடும். அதற்காக முதலில் பயன்படுத்த வேண்டிய ஒரு முக்கியமான பொருள் மிளகு.
மிளகிற்க்கு பணத்தை ஈர்க்கும் ஆற்றல் இருக்கிறது. எனவே ஒரு பத்து மிளகை வெள்ளைக் காகிதத்தில் மடித்து கொண்டு, அதனை உங்கள் பணம் வைக்க்கும் பர்சில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு உண்ணும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பொருள் இஞ்சி. இதனை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள பணம் உங்களிடம் வருவதற்கான ஆற்றலையும் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.
அடுத்ததாக கிராம்பு, இதனை உங்கள் வீட்டின் மற்றவர்கள் கண் படும் இடத்தில் எல்லாம் போட்டு வைக்கலாம்.
அது மட்டுமல்லாமல் நீங்கள் பணம் வைக்கும் பீரோ மற்றும் டப்பாவிலும் போட்டு வைக்க வேண்டும்.
அடுத்ததாக ஜாதிக்காய், பட்டை, ஏலக்காய், பச்சைக்கற்பூரம் இவை அனைத்தையும் நீங்கள் பணம் வைக்கும் பர்ஸ் மற்றும் உங்கள் கைப்பையில் வைத்துக் கொள்ளலாம்.
இவை அனைத்துக்கும் இயல்பாகவே பணத்தை ஈர்க்கும் திறன் உள்ளது. இவை மகாலட்சுமி வாசம் செய்யும் பொருட்களாக பார்க்கப்படுகிறது. அடுத்ததாக துளசி என்பது பெருமாளுக்கு மிகவும் உகந்ததாகும்.
இதனை தினமும் உங்கள் வீட்டு பூஜை அறையில் வைப்பது லட்சுமி கடாட்சத்தை கொடுக்கிறது. அடுத்ததாக இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக சேர்த்து வைக்கும் பொழுது அதற்கு அபரிமிதமான சக்தி கிடைக்கிறது.
இதனை தொழில் செய்யும் இடத்தில் வைத்துக் கொண்டால் உங்கள் தொழிலில் அதிக லாபம் கிடைக்கும்.
வியாபாரம் செய்யக்கூடிய கடைகளில் உங்கள் கல்லா பெட்டியில் வைத்துக் கொண்டால் வாடிக்கையாளர்களின் வரவு அதிகரிக்கும். அதே போல் வீட்டில் பணம் வைக்கும் இடத்தில் இதனை வைத்துக் கொண்டால் உங்கள் பணம் பல மடங்காகப் பெருகும்.
அவ்வாறு பச்சை கற்பூரம், 2 ஏலக்காய் மற்றும் 27 எண்ணிக்கையில் சோம்பு மூன்றையும் ஒரு மஞ்சள் துணியில் ஒன்றாக கட்டி வைக்க வேண்டும்.
