தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 5 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த அமைச்சரவைக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த அமைச்சரவை கூட்டத்தில் தமிழக அரசின் பட்ஜெட் தொடர்பாக ஆலோசனை நடைபெற இருக்கிறது .
மேலும் நிதிநிலை அறிக்கை , வேளாண் அறிக்கை ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிப்பது உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



