நாடு ஸ்தம்பிதமடையும் அபாயம்.

0

நாட்டில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இந்நிலையில் நாட்டின் அத்தியாவசிய செயற்பாடுகள் சகலதும் பாரிய அளவில் பாதிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் பொதுப்போக்குவரத்து, தொழிற்சாலைகள், தொழில்துறைகள், விவசாயம் என்பன முழுமையாக முடங்கும் அபாயம் உள்ளதாகவும், இதனால் நாடு ஸ்தம்பிதம் அடையும் நிலை ஏற்படும் எனவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை நாடு வங்குரோத்து நிலைமையினை அடைந்து விட்டது,

மேலும் நாட்டில் டொலரும் இல்லை ரூபாவுமில்லை, மெழுகுவர்த்தி ஏற்றி சுற்றுலாத்துறை சேவை மற்றும் கைத்தொழிலை மேம்படுத்த முடியாது என்பதை ஆட்சியாளர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply