12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே மாதம் 5 ஆம் திகதி ஆரம்பம்.

0

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே மாதம் 5-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரை நடைபெறும்.

அத்துடன் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே மாதம் 9-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை நடைபெறும்.

10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே மாதம் 6-ந்தேதி தொடங்கி 30-ந்தேதி வரை நடைபெறும்.

10, 11 மற்றும் 12 -ம் வகுப்புக்கான செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 25 -ந்தேதி தொடங்குகிறது.

மாணவர்கள் பதற்றம் அடையாமல் தேர்வை எதிர்கொள்ளவேண்டும் என கூறியுள்ளார்.

Leave a Reply