சட்ட விரோத மீன் பிடியில் ஈடுபட்ட ஏழு இந்திய மீனவர்கள் அதிரடியாக கைது.

0

கிளிநொச்சி தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஏழு இந்திய மீனவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த இந்திய மீனவர்கள் ஏழு பேர் நேற்று இரவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டு கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை இன்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 13ம் திகதி அதே பகுதியில் அத்துமீறி மீன்பிடித்த 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply