குளியல் உடையில் வந்த நாயகியை பார்த்து படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் அதிர்ச்சி !!

0

புதுமுகம் ராஜ்குமார் நடிப்பில் ‘கூத்தன்’ என்ற படத்தை ஏ.எல்.வெங்கி இயக்குகியுள்ளார். நீல்கிரிஸ் முருகன் தயாரித்துள்ளார். இந்த படத்தில்
புதுமுகம் ராஜ்குமார், ஸ்ரீஜிதாகோஷ், கைரா நாராயணன், சோனல் சிங், பாக்யராஜ், ஊர்வசி ஆகியோர் நடித்துள்ளனர்.

இதன் ஆடியோ வெளியிடும் விழாவில், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் பேசுகையில் ,’இப்படத்தின் ஹீரோ ராஜ்குமார் பிரமாதமாக நடனம் ஆடி இருக்கிறார். படத்தில் நடித்த ஹீரோயின்கள் மேடையில் அமர்ந்திருக்கின்றனர். ஒரு கதாநாயகி மட்டும் குளித்துவிட்டு அப்படியே அதே உடையில் வந்துவிட்டதுபோல் டிரஸ் செய்திருக்கிறார். அதை பார்த்ததும் ஷாக் ஆகிவிட்டேன். இதுவரை இப்படி நான் பார்த்ததில்லை’ என்றார்.

இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் பாக்யராஜ் பேசும்
போது, ‘கூத்தன் படத்தை அற்புதமாக எடுத்திருக்கிறார்கள். இப்படத்தின் தயாரிப்பாளர் ஒரு பேக்கரியில் வேலை பார்த்து இந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறார். இந்த மேடையிலேயே இப்படத்திற்கான டிக்கெட்டுகளை விற்றிருக்கிறார். அந்த டிக்கெட்களை அவரது நண்பர்கள், உறவினர்கள் பொறுப்பேற்று வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். திட்டமிடுதலுடன் இப்படக்குழு இயங்குவதால் கண்டிப்பாக வெற்றிபெறும்’ என்றார். – Source: tamil.eenaduindia


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply