குபேர கடவுள் தனது சொத்துக்களை இழந்து நிர்கதியாக நின்ற பொழுது, அவர் சிவபெருமானிடம் சென்று மனமுருக வேண்டிக்கொண்டார்.
எனது பிரச்சனை தீர நான் என்ன செய்ய வேண்டும்? இதற்கு தீர்வாக சிவபெருமான் குபேரரை நெல்லிமரத்திடம் சென்று உனது கோரிக்கையை சொல்லி, மனமுருக வேண்டிக்கொள் என்றார்.
குபேரனும் நெல்லி மரத்தை நினைத்து, தவம் புரிந்து அவரது வேண்டுதலை சொல்ல, நெல்லிமரத்திடம் வரம் பெற்று, தான் இழந்த சொத்துக்களை திரும்ப பெற்றார் என்பதும் புராணக் கதையாகும்.
இவ்வாறு சொத்துப் பிரச்சனையில் இருந்து உங்கள் சொத்துக்கள் உங்கள் வசம் வந்து சேரவும், இந்த நெல்லிகாய் பரிகாரத்தை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
அவ்வாறு வியாபாரத்தில் பிறரை நம்பி நஷ்டமடைந்தவர்கள், தொழிலில் லாபம் கிடைக்காதவர்கள் மற்றும் கடன் கொடுத்து, அதனை திரும்ப வாங்க முடியாமல் பிரச்சனையில் மாட்டிக் கொண்டவர் அனைவரும் இந்த வேண்டுதலை செய்ய, உங்களுக்கான தீர்வு எந்த வழியிலாவது கிடைத்துவிடும்.
அதற்கு முதலில் இரண்டு நெல்லிக்காய்களை எடுத்து கொள்ள வேண்டும்.
பின்னர் அவற்றின் மேற்புறத்தை வட்டவடிவில் வெட்டி எடுத்து, அதன் உட்புறம் கத்தி வைத்து சிறிய குழி போன்று செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் இந்த நெல்லிக்காய்களுக்கு மஞ்சள், குங்குமப் பொட்டு வைத்து, அவற்றை இரண்டு அகல் விளக்குகளில் வைக்க வேண்டும்.
பின்னர் அதில் திரி போட்டு நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும்.
பின்னர் இவற்றை ஒரு தாம்புல தட்டில் வைத்து, அதனை சுற்றி சிறிது மலர்கள் தூவி, பூஜை அறையின் முன் வைத்து தீபம் ஏற்றி, மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.
இந்த வழிபாட்டை செவ்வாய், வெள்ளி, கிருத்திகை, பவுர்ணமி போன்ற விசேஷ தினங்களில் செய்துவர விரைவில் பலன் தரும்.
